அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவிற்கு எதிராக பெங்களூரு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் காரணமாக மனம் வேதனை அடைந்த 23 வயது பெண் வெள்ளிக்கிழமை தீக்குளித்து படுகாயம் அடைந்தார்.
இது குறித்து போலீஸார் தரப்பில் கூறியதாவது: விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகே என்.முக்குளம் கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமாரின் மனைவி சித்ராதேவி(23). இந்நிலையில் சொத்துக் குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதிலிருந்தே வருத்தத்துடனும், கடுமையான மன வேதனையுடனும் இருந்து வந்தாராம்.
இதனால், மேலும் மனம் உடைந்த சித்ராதேவி கணவர் வேலைக்குச் சென்ற நேரத்தில் வீட்டிற்குள் சென்று தனக்கு தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக் கொண்டாராம்.
இதையடுத்து, அருகில் இருந்த உறவினர்கள் மீட்டு அருப்புக்கோட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இது தொடர்பாக நரிக்குடி காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கென் சினிமாவின் சொத்து... யூத் படத்தைப் பாராட்டிய ரிஷப் ஷெட்டி!

கருவுற்று இருப்பதை வித்தியாசமான முறையில் அறிவித்த தீபிகா படுகோன்!

படிப்பு மட்டும் போதுமா?செய்யறிவு உங்கள் வேலையை பறிக்காமல் இருக்க என்ன செய்யலாம்?

ஜம்மு-காஷ்மீரில் பேருந்து கவிழ்ந்து 15 பேர் பலி! 20 பேர் காயம்!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

